தாயே, தமிழே! – தாராபாரதி

தாயே, தமிழே!   நினைவாலும் கனவாலும் எனையாளும் தமிழ் மகளே! திணைமாவைவிட இனிக்கும் தேமாவும் புளிமாவும் பனையோலை யில்கண்டு பதநீர் குடித்தவளே! உயிரே! மெய்யே! உயிர்மெய்யாய் இருப்பவளே! தமிழே, உனக்கு உயிர் – மெய்யாய் இருக்கிறதா? குற்றுயிராய்க் கிடப்பவளே ஊசலாடும் குறையுயிரில் வாழ்பவளே சிற்றுயிரைத் தந்துன்னை எழுப்புதற்கு சிலிர்த்திருக்கும் உன் மக்கள் சிறுத்தைக் கூட்டம்! – கவிஞர் தாராபாரதி

திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்

திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம்.  மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை.   மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…

வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்

வையகத் தமிழ் வாழ்த்து   பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…

தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்

தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலையென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய் அடிக்கே எனையாண் டருள். – பூங்கொடி