தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற
2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற தொல்காப்பியம் திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785 அல்லது 07915379101 எண்ணுக்கு அழையுங்கள். சுசிதா / Sujitha
தமிழால் முடியாதது யாதும் இன்று – சி.இலக்குவனார்
தமிழால் முடியாதது யாதும் இன்று – சி.இலக்குவனார்
திருக்குறள் தொடர்சொற்பொழிவு, பாளையங்கோட்டை
வைகாசி 13, 2048 மே 27, 2017 மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்கோட்டை தலைவர் – நல்லாசிரியர் புலவர் வை. இராமசாமி முன்னிலை – தமிழ்மாமணி பேரா.முனைவர் வளன் அரசு பொழிஞர்: தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா பொருள் : நீரினும் நன்றதன் காப்பு உலகத்திருக்குறள் தகவல் மையம்
இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2
(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி) இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2 ? தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா? கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன. ? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10
[திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8 தொடர்ச்சி) : வெ. அரங்கராசன்] திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 ஒன்பதாம் பாசுரம் திருக்குறள்-தமிழ்மறைநூல் மாலளந்தான் மூவடியால் ; முப்பாலன் ஈரடியால் ; ஞாலத் தெளிவூட்டும் நல்லறப்பா சாற்றுமுயர் சீலம் உணர்மாந்தர் தேசம் பலவாழ்வார் ; காலம் கடந்துய்யும் கன்னித் தமிழ்மறைநூல் ; மூலப் பிறப்பொக்கும் மண்ணிலே எவ்வுயிர்க்கும் வேலியின்றி வாழ வகுத்தவரே வள்ளுவர்காண் ! சாலப் பயன்ஈனும் தீங்குறளைச் சென்றோதக் காலைப் புனலாடிக் கைமலர்கொள், எம்பாவாய் ! பத்தாம் பாசுரம் சிலப்பதிகாரம்-முதல் காவியம் ஆன்ற…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன. இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம். “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…
திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி.கந்தையா
திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடிலியர்) அருத்த சாத்திரம், காம சாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம், முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழிலேயே இருந்திருத்தல் வேண்டுமென்பது வெளிப்படை. தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவிவழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர்,…
நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை! அரசின் நாற்பெரும் தூண்களுள் ஒன்றாக விளங்குவது நீதித்துறை. இந்தியாவில் மக்களாட்சி இந்த அளவிற்கேனும் இருக்கின்றது எனில், அதற்குக் காரணம் நீதித்துறைதான். பல்வேறு நேரங்களில் நீதிபதிகள் மக்களின் காவலர்களாக விளங்கும் வகையில் தீர்ப்பு வழங்குகின்றனர்’ இதனால் மக்கள் நம்பிக்கை மூச்சில் வாழ்கின்றனர். அதே நேரம் சட்டம் யாவர்க்கும் சமம் என்பது பொய்த்துப்போனதற்குக் காரணமும் நீதித்துறைதான் என்பதுதான் கொடுமையானது. பல நேரங்களில் மக்களின் காப்புநிலையிலிருந்து நழுவித் தாக்கு நிலையில் காலூன்றுவதே இன்றைய தலையாய சிக்கலாகின்றது. குற்றத்தின் அளவு, குற்றம் சாட்டப்பட்டவரின் சூழல்,…
பாரதி கலைக்கழகத்தின் இலக்கியச்சங்கமம்
கவிமாமணி புதுவயல் ந.செல்லப்பன் 90ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் ஆவணி 12. 2047 / ஆகத்து 28, 2016 காலை 9.00 திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ஆதம்பாக்கம் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் உரையரங்கம் கவியரங்கம் முனைவர் கோ.மோகனராசு முனைவர் குமரிச்செழியன்
மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா
மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா மொரீசியசு நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்டக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில் ஆடி 09, 2047 / சூலை 24, 2016 அன்று சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்குப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார், அரிமா சங்க…
திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 : மு. முத்துவேலு
(திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 தொடர்ச்சி) திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 குற்றங்களின் வரையறைகள் இ.த.தொ. சட்டமும் திருக்குறளும் குற்றங்களை வரையறை செய்வதில் ஒத்திருக்கும் தன்மையுடையன. குற்றங்கள் பலவற்றுள்ளும் “திருடுதல்” என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் குற்றமாகும். இக்குற்றச் செயலை இ.த.தொ. சட்டம் வரையறுப்பது பின்வருமாறு அமைகின்றது. Theft – intending to dishonesty any movable property out of possession of any person without that person”s consent, moves that property…
திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு
திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…