முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21

(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி!                                                                                                               தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345  தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :  இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…

மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா

முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு:  திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்,திருநகர், மதுரை 625006

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்   கார்த்திகை 01, 2048 / நவம்பர் 11, 2017 காலை 9.00 இலக்குவனார் இல்லம் முன்பு 4ஆவது நிறுத்தம், திருநகர், மதுரை 625006       9 ஆம் வகுப்பில்  பள்ளி அளவில் முதல் 10 இடங்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணாக்கியருக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பெறுகின்றன. தமிழன்பர்கள் புகழுரை ஆற்றுவர். அன்புடன் இரா.பா.முருகன்…

வணக்கம் யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

வணக்கம் யாருக்கு?     ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு அவரது கட்சித் தொண்டர்களும் பிறரும் வணக்கம் செலுத்துவதுபோலும் அவர் வெறுமனே நிற்பதுபோலும இதழ்களில் சில படங்கள் வருகின்றன. அதைப்பார்த்த நண்பர்கள், “வணக்கம் செலுத்தினால்  மறு வணக்கம் தெரிவிக்காமல் இருக்கிறாரே!  ‘சின்னம்மா’ என்று பணிவன்புடன் அழைப்பவர்களிடம்  மறு வணக்கம் தெரிவிப்பதுதானே முறை” என்றனர். அதற்கு நான், “இவர் வணக்கம் செலுத்தாமல் இருந்தால் தவறுதான்.  ஆனால், இவர் வணக்கம் தெரிவித்த படம் வெளி வந்திருக்காது.  ஏனெனில் வந்துள்ள படங்களில் சிலர் மட்டும் வணக்கம் செலுத்துவதுபோல் காட்சிகள் உள்ளன. அப்படியானால் அவர்…

மாநில வளைகோல் போட்டி : திருநகர் அணி வெற்றி

மதுரை திருநகர் வளைகோல் மன்றம் சார்பில் வளைகோல் வீரர்கள் பாலசுப்பிரமணியன், செயசிங், பழனியாண்டவர் மெய்யப்பன் ஆகியோர்களது நினைவுச் சுழற் கோப்பைக்கான 15– ஆம் ஆண்டு மாநில அளவிலான வளைகோல் போட்டி  பிப்ரவரி 5 அன்று காலையில் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள  முதன்மை நகரங்களைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடின. முதல் நாளன்று காலையில் வாடிப்பட்டி ‘எவர்கிரேட்’ வளைகோல் மன்ற அணியும், இராசபாளையம் பெடட் பிரன்சு அணியும் களத்தில் இறங்கி மோதின. அதில் வாடிப்பட்டி எவர்…