இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1. எங்கும் கலந்துள்ள இறைவன் கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என் எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில் கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில் கலந்தான் கருணை கலந்து. எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது. இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான். எல்லா இடங்களிலும் கலந்து…