உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன
ஒரு காலத்தில் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயராக ஆக்கும் இயக்கம் மும்முரமாக நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது. சைவ வைணவ ஆசிரியர்கள் காலத்தில் நமது திருக்கோயில்கள் தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டன. அவை வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன. திருமரைக்காடு – வேதாரண்யம் என்றும் திருவெண்காடு, ‘சுவேதாரண்யம்’ எனவும் திருவையாறு ‘பஞ்சநதித் தலமாகவும்’ மாறியது. சில மொழி பெயர்ப்புகள் மூலம் வடமொழியினரின் அறியாமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். ‘அஞ்சல் நாயகி’ என்னும் அம்பாளுக்கு ‘அபயாம்பிகை’ என்ற பெயர் வடமொழியில் ஏற்பட்டுள்ளது. அஞ்சல் நாயகி…
இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்
இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில்…
இந்துக்கள் யார்?
இந்துக்கள் யார்? 10, 000 ஆண்டுகளின் முன்னர், காகேசியரில் ஒரு கூட்டத்தார் தாம் இருந்த நாட்டைவிட்டு மேற்கே ஐரோப்பியாவிற்கும், மற்றொரு கூட்டத்தார் இந்தியாவிற்கும் புறப்பட்டார்கள். மேற்கே சென்றவர்கள் செர்மனி முதலிய இடங்களில் தங்கினார்கள். கிழக்கே சென்றவர்கள் கைபர், காபூல், போலன் கணவாய்களின் வழியாகச் சிந்து ஆற்றங்கரையில் குடியேறினார்கள். பின்னவர்களாகிய ஆரியர்கள் சிந்து ஆற்றங்கரையில் குடியேறுவதற்கு முன்னரே, தமிழர்கள் அராபியர்களுடனும் பாரசீகர்களுடனும், அக்கேடியர், சுமேரியர், அசிரிய தேசத்து அசுரர், ஃபினீசியர் முதலியோர்களுடனும் – தரைவழியாகவும் தண்ணீர் வழியாகவும் வாணிபம் செய்து வந்தார்கள். அராபியர்களும் பாரசீகர்களும் தம்…
