ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல!   மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன.  தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான  நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர்.  தில்லி  ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி…

முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்!   புதுச்சேரியின்  செயலாட்சியராக – துணை நிலை ஆளுநராகப்- பொறுப்பேற்றுள்ள முனைவர் கிரண்(பேடி)க்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு நிலைகளில் தன் கனவுகளை நனவாக்கி வருபவர், புதுச்சேரியிலும் தன் கனவுகளை நனவாக்கி மக்கள் பணியாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.   பொதுவாக ஆளுநர் என்பது பொம்மை அதிகாரமுடைய பதவி என்பர். மத்திய அரசின் சார்பாகச் செயல்பட்டாலும், மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே இணக்கமான போக்கு இருக்கும்பொழுது மாநில அரசிற்கு மாறான போககு இருப்பின்…