ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!    ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.   இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று…

தமிழியல் ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி அறிஞர் ஆ.வேலு(ப்பிள்ளை)- இரவிக்குமார்

ஈழத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை (1936-2015): தமிழியல் ஆய்வுக்கு வழிகாட்டி     ஈழத்தைச் சேர்ந்த அறிஞர் ஆ. வேலுப்பிள்ளை மறைந்த செய்தியை  அறிந்தபோது கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவரது நினைவு எழாமல்போய்விட்டதே என வருத்தமுற்றேன். அவரை  நேரில் அறிந்ததில்லை எனினும் அவரது எழுத்துகள் வழியே நெருக்கமாய் உணர்ந்திருக்கிறேன். தொல்லியல், கல்வெட்டியல், செவ்வியல் இலக்கியம் எனப் பல்வேறுதுறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராக இருந்தவர். தமிழும் பௌத்தமும் குறித்துபேராசிரியர்பீட்டர் சால்க்குடன் இணைந்து அவர் தொகுத்த இரண்டு தொகுதிகள் மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்தவை. தனது 28 ஆவது அகவைக்குள் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1960-1961 ஆம் ஆண்டுக்கான இலங்கை குடிமைப்பணித் தேர்வில் இலங்கை முழுதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக அவர் இருந்தார். அந்தப் பதவிக்குச் சென்றிருந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கப் பொறுப்புகளுக்குப் போயிருக்கலாம். ஆனால் ஆசிரியர் பணியிலேயே தொடரவேண்டும் என அவர் முடிவெடுத்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் கல்வெட்டியலைப் பயின்று…