கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? :  தி.க.உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? :  தி.க.உறங்குவது ஏன்?     கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாளர்களா  அல்லரா என்பதை மக்கள் அறிவார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது.  நேர்மையாக வாழும்    ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், “நான் படித்தவன், நேர்மையாகத்தான் வாழ்வேன்”…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி)  வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) தென்புலத்தார்     “படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசையாதலின் தென் புலத்தார் என்றார்” என்பது பரிமேலழகர் கூறும் உரையாகும். உலகத்தை அயன் படைத்தான் என்பதும் அப்பொழுது படைக்கப்பட்டவர்  தென்புலத்தில் உளர் என்பதும் அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஏன் படைக்கப் பட்டார்கள்? அவர்களுடைய கடமை யாது? தென்…

தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?   நிலவளத்தையும் மக்களின் பொருள் வளத்தையும் சுரண்டிப்பிழைக்கும் சாமியார் ஒருவர், சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லியுள்ளார். தமிழ் தெரியாத மாந்தருக்கே தமிழ்நாட்டில் இடம் இல்லை என்னும்பொழுது தமிழ் தெரியாத அவரின் சிவனுக்கு இங்கு என்ன வேலை?  அவருடைய சிவனுக்கே இங்கே இடமில்லாத பொழுது அவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!   சிவ வழிபாட்டைப் பழமையானதாகச் சிலர் கூறி வந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இல்லை. “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்…

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.   திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.   இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள்  தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான்.  முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14    நாமே தெய்வம்! நன்கறிக! தன்மதிப்புடன் வாழத் தன்னம்பிக்கை வேண்டும். அதனால் ‘நாம் அனைவருமே தெய்வம்’ எனப் பல இடங்களில் கூறுகிறார்.         “வீரர்தம் தோளினிலும் – உடல்         வியர்த்திட உழைப்பவர் தோள்களிலும்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 154 | திருமேகனைச் சரண் புகுதல்) தெய்வம் இருப்பதாகக் கூறுகிறார். “செல்வம் என்றொரு செய்கை எடுப்போர்         செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்         கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” (பாரதியார் கவிதைகள்:…

தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு

  தேர்தல் தெய்வம் தந்த வரம்  வாக்குரிமை என் தேசத்தின்… என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு… பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது…. குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல்…

தெய்வம் தமிழ்ச்சொல்லே! –

  சிலர் தெய்வம் வேறு; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும். உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்….

தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்

  திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…