தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன – கா.பொ.இரத்தினம்
தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன தொல்காப்பியத்துள், ”என்மனார் புலவர்”” ”என மொழிப, உணர்ந்திசி னோரே”” ”பாடலுட் பயின்றவை நாடுங் காலை”” ”சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”” ” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே “” ”நல்லிசைப் புலவர் , , , , வல்லிதிற் கூறி வகுத்துரை த்தனரே “” ”நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே “” ”நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே “” என்றிவ்வாறு…
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது – க.அன்பழகன்
“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது . . . .மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணீனீயமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; “பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும்…
பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம் – க.வெள்ளைவாரணன்
பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம் ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை, “ஆர்ய” என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தனரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்தியதென்பதும், அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ”ஐயர் யாத்தனர் கரணம் என்ப” எனத்…
வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு – மு.கருணாநிதி
வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு உலகில் பல பகுதிகளில் உருவான இனங்கள் மொழிச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின எனினும்; அவற்றில் மொழியில் இலக்கியம் கண்டு, அதற்கு இலக்கணமும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பே தொடங்கிய வளர்ச்சிக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே மெருகேற்றிக் கொண்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தமிழ் இனத்துக்கே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரமாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் பழங்கால வாழ்க்கை முறைக்குறிப்புகள், ஒழுக்கம் பற்றிய பல செய்திகள், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் நிலத்தில் நடைமுறையில் இருந்தன. எனினும்…
இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரின் புதிய பார்வை இலக்குவனார் திருவள்ளுவன் தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார். உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ, அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்
(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை 4. தொல்காப்பியர் நோக்கு தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்த னவே பாடலுள் பயின்றவை நாடுங்…
தஇஅ- தொல்காப்பியம், திருக்குறள், ஆத்திசூடி போட்டிகள்
தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற
தொல்காப்பியர் ஒரு சிறந்த தமிழர்
தரவு : தமிழ்ச்சிமிழ்
வேதங்களுக்கு முந்தையது தொல்காப்பியம்
தரவு : தமிழ்ச்சிமிழ்
தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்
இயல் பகுப்பும் நூற்பா அளவும் தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு: எழுத்ததிகார இயல்கள் நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு, மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம் உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம், தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு. 1. நூல் மரபு, 2….
தொல்காப்பிய விளக்கம் – 11: முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்) தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே இந்நூற்பாவை இயற்றியுள்ளார். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிது மாறுபடினும் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று கூறப்பட்ட தம் இயல்புகளில் மாறுபடா…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 9
– தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முன் இதழ்த் தொடர்ச்சி) 5. அரசியல் வாழ்க்கை பிளட்டோ கூறுவதுபோல், மனிதன் இயற்கையிலேயே அரசியல் பொருளாவன். எனவே அரசியல் அவனோடு வளர்கிறது. ‘மனிதன், தன்னுடைய ஆட்களுடன் கூடவே வளர்கிறான்’ என்பதை அரிசுடாடில் வலியுறுத்துகிறார். எனவே அரசியல் வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும். முந்தைய தலைப்பில் இருந்து தொல்காப்பிய காலத் தமிழர்கள் மன்பதை வாழ்க்கையில் முன்னேற்ற நிலையை அடைந்திருமையை உணரலாம். அவர்களின் அரசியல் வாழ்வும் பின்தங்கியதன்று. தொல்காப்பியர் வாழ்க்கையையும் இலக்கியம் போல் அகம்,…