தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)   04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03   “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.   “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

      ‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான்  கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே…

நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்

நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் சிதைவெனப் படுபவை வசையற நாடின், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல் கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல், தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனம்கோள் இன்மை, அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும். தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி)   வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே. பெயர்கள் பலவகைப்படும். இவற்றை ஒல்காப்புகழ் தொல்காப்பியர், நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே, பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே பல்லோர் குறித்த…

தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல் – பு.அ.சுப்பிரமணியனார்

தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல். – அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார்   தமிழ்ப் பழங்குடி மக்களாகிய நமக்கு நம் மொழியின் இலக்கியப் பரப்பை உள்ளிய அளவிலேயே பெருமகிழ்ச்சி கொள்வதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அத்தகு பேரிலக்கியங்களின் அடிக்கல்லே தொல்காப்பியமெனும் பழந்தமிழ் இலக்கணமாம்.   தொல்தமிழ்இலக்கணப்பெட்டகமாம் தொல்காப்பியத்தை எண்ணிப் பெருமையும் சிறப்பும் பெறுகின்ற பெரும் பேற்றினைத் தமிழ் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வுலகில் எண்ணற்ற நாடுகள் அவற்றின் மொழிகளைச் செம்மைப்படுத்த முனைந்த காலத்திற்கும் பன்னூறாண்டுகட்கு முன்னரே பைந்தமிழ் மக்கள் எத்தகு கால உச்சியை எய்தியிருந்தார்கள்…

பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார்

  பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1) “முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை…

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58),…

வடசொல் என்பது ஆரியம் மட்டுமல்ல! – ப.பத்மநாபன்

  தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல்…

தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன – கா.பொ.இரத்தினம்

தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன                 தொல்காப்பியத்துள்,                 ”என்மனார் புலவர்””                 ”என மொழிப, உணர்ந்திசி னோரே””                 ”பாடலுட் பயின்றவை நாடுங் காலை””                 ”சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே””                 ” மொழிப, புலன்நன் குணர்ந்த புலமையோரே “”                 ”நல்லிசைப் புலவர் , , , , வல்லிதிற் கூறி வகுத்துரை த்தனரே “”                 ”நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே “”                 ”நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே “” என்றிவ்வாறு…

“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது – க.அன்பழகன்

“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது . . . .மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணீனீயமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; “பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும்…

பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம் – க.வெள்ளைவாரணன்

  பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம்   ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை, “ஆர்ய” என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தனரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்தியதென்பதும், அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ”ஐயர் யாத்தனர் கரணம் என்ப” எனத்…