போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! ஐ.நா சிறப்புத் தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்- மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கைக்கிணங்கப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.”என்று, ஐ.நாவின் சிறப்பு வல்லுநர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நேற்று கொழும்பு தாசு சமுத்திரா உறைவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.நா. சிறப்பு…

சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல

 கொல்லப்பட்டவர்கள் பற்றிய  சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது பேரினச் சிங்களவாத அரசு கடந்த 30 ஆண்டுகளாக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த  இனப்படுகொலையின் போது, நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   மேலும் தமிழர் பகுதிகளை  வன்முறையில் கவர்ந்துள்ள சிங்களப்படை தமிழர்களின் நிலங்களைக் கவர்ந்தும்  மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை  அரங்கேற்றி வருகிறது. உலக நாடுகளும் இதுகுறித்துக் கட்டுப்பாடற்ற உசாவல் நடத்த வேண்டும் வற்புறுத்தி வருகின்றன.