சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – இலக்குவனார்திருவள்ளுவன்
(பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! “…பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே…” – கபிலர், நற்றிணை 32: 7 – 9 பதவுரை: நாடி = ஆராய்ந்து; நட்பின் = நட்பு கொள்வது ; நட்டு = நட்புகொண்டு; நாடார் = ஆராயார்; ஒட்டியோர்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) – இலக்குவனார்திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 17 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதைவரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்துவான் உற நிவந்த மேல் நிலை…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 : அன்றே சொன்னார்கள் 50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 11- தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும் பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து வீடுகளின் தொடர்ச்சியாகக்…
புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாசன அறிவியல் – அன்றே சொன்னார்கள்:தொடர்ச்சி) புலம் பெயர் பறவைகள் பறவைகள் சில பருவங்களில் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை – தம் புலத்தில் இருந்து பெயர்ந்து வேறு புலத்திற்குச் செல்வதைப் புலம் பெயர்தல் (migration) என்கின்றனர். இதற்கான தமிழ்க்கலைச் சொல் வலசை என்பதாகும். எசியாடு(Hesiod), ஓமர்(Homer), எரொடொதசு(Herodotus), அரிசுட்டாடில்(Aristotle) முதலான கிரேக்க அறிஞர்கள் பறவைகள் இடம் விட்டு இடம் மாறுவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் பறவைகள் பிற பகுதிகளில் இருந்து வருவதையும் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் எங்கும் செல்லாமல் ஒரே பகுதியிலேயே தங்கி…
மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் – அன்றே சொன்னார்கள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தாழிமரம் அறிவோமா? bonsai – தொடர்ச்சி) மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் அன்றே சொன்னார்கள் 10 இன்றைய அறிவியல் அறிஞர்கள் செயற்கையாக மழை பொழியச் செய்கிறார்கள். மழை வேண்டாத பொழுது இயற்கையாகப் பெய்வதற்குரிய முகில் கூட்டத்தை – மேகக் கூட்டத்தை – இடம் பெயரச் செய்து அந்தப் பகுதியில் மழை பெய்ய விடாமல் செய்கிறார்கள். என்ற பொழுதும் பழங்காலத்தில் மழைபற்றிய அறிவியல் உணர்வு பிற நாட்டாரிடம் இல்லை. உரோம் மக்களின் மழைக்கடவுள் பெயர் பொசெய்டன்…
தாழிமரம் அறிவோமா? – bonsai – அன்றே சொன்னார்கள் 14 (விரிவு)
தாழிமரம் அறிவோமா? bonsai அன்றே சொன்னார்கள் 14 தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது….
நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! . இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டு போகும் ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே…
ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமானால், கோப்பெருஞ்சோழ வேந்தரையும் புலவர் பிசிராந்தையாரையும்தான் கூறுவோம். உலக அளவில், புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 785) என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இவர்கள். தமிழுலகில் மன்னர் பாரி – புலவர் கபிலர், மன்னர் அதியமான் – புலவர் ஔவை எனப் பலரை நாம் நட்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மார்க்சு – எஞ்சல்சு நட்பையும் உலகம் போற்றுகின்றது. இருப்பினும் தோழமைக்கு எடுத்துக்காட்டாகத்…
நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! – ஏ.எச்.யாசிர் அசனி
நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! உதிர்க்கப்பட்ட சொற்களில், உதவி நீட்டுவதல்ல நட்பு, சொற்கள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு. தீமைகளுக்குத் தீனியாய் இருப்பதல்ல நட்பு, தீமைகளைத் தீயிட்டு அழிப்பதே நட்பு. பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டைக் கிளவியாய், இருப்பதல்ல நட்பு, இணைந்தாலும், பிரிந்தாலும் பொருள்தரும், அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு. கலவரங்களுக்குக், கருவாய் இருப்பதல்ல நட்பு, அதனைக், கருவிலேயே கருக்கலைப்பு செய்வதே நட்பு. அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு, நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு . ஏ.எச்.யாசிர் அசனி, இலால்பேட்டை அபுதாபி. தொடர்புக்கு : 0556258851
இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்
10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில் வரும் தமிழ் வாழ்த்துப் பாடல். “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…
திருக்குறள் அறுசொல் உரை – 079. நட்பு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 078. படைச் செருக்கு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 079. நட்பு இணைஇலா நலம்தரும் துணையாக விளங்கும் வளர்நட்பின் இலக்கனம். செயற்(கு)அரிய யாஉள நட்பின்? அதுபோல், வினைக்(கு)அரிய யாஉள காப்பு? நட்புபோல் அரியதோர் நல்உறவும், பாதுகாப்பும், வேறு எவை? நிறைநீர, நீரவர் கேண்மை; பிறைமதிப் பின்நீர, பேதையார் நட்பு. அறிஞரின் நட்பு, வளர்பிறை; அறிவிலியின் நட்பு தேய்பிறை. நவில்தொறும்…
அணிற்பிள்ளை – தி.ஈழமலர்
கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்! பிறந்து ஓரிரு நாட்களே ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் – பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை. அந்த அணில், இவர்கள் புதுமனை புகும் பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பொழுது, அழகன் மட்டும் தாத்தாவின் அறையை அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன்…