மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லாரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று ‘திலகவதியார் சரித்திரம்’…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 இன் தொடர்ச்சி) 431. கடலியல் Oceanology 432. கடல் உயிரியல் Marine biology 433. கடல் பொறியியல் Marine Engineering 434. கடல் வானிலையியல் Naval Meteorology 435. கடல்சார் தொல்லியல் Marine Archaeology 436. கடல்முள்ளி யியல் Acanthology 437. கடற்கரைப் பொறியியல் Coastal Engineering 438. கடற் பாசியியல் Algology (2) 439. கடற்பரப்பு வானிலையியல் Marine Meteorology 440. கடைக்கால் பொறியியல் Foundation Engineering 441. கடைத்தேற்ற இயல் Soteriology…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம்
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் வேறு 1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம். 2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறு. பகைசிறி தின்றி இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள். 3. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும்…
ஈழத்துத் திறனாய்வு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 19 6. விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓர் அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம். இலக்கியப்படைப்புகளை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 404 – 420 இன் தொடர்ச்சி) 421. ஓடிலி யியல் Limacology 422. ஓட்டுடலியல் Crustaceology / Malacostracology 423. ஓமரியல் Homerology 424. ஓய்வறை எழுத்தியல் Latrinology 425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் சொல்லின் மூலம் தமிழ்ச்சொல்லான ஓரை. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 404 – 420 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 396- 403 இன் தொடர்ச்சி) 404. ஒவ்வாமை இயல் Allergology 405. ஒழுங்கிலி யியல் Chaology 406. ஒளி அளவை இயல் Photometry 407.ஒளி உயிரியல் Photobiology 408. ஒளி ஒப்புமை யியல் Optical Analogy 409. ஒளிபுவிவடிவியல் Photogeomorphology 410. ஒளிமின்னணுவியல் Opto electronics 411. ஒளி வேதியியல் Photo Chemistry 412. ஒளி வளைசலியல் Photoecology 413. ஒளித்துத்த வரைவியல் Photozincography – ஒளித்துத்த வரைவியல், நிழற்பட முறையில் துத்துநாகத் தகட்டில் உருச்செதுக்குங் கலை எனக்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 396- 403: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 378 – 395 இன் தொடர்ச்சி) 396. ஒலி உச்சஇயல் Accentology 397. ஒலி ஒளியியல் Acousticcooptics 398. ஒலிப் பொறியியல் Sound Engineering 399. ஒலிய வியல் பேச்சொலிகள்பற்றிய அறிவியல் என்பதால் ஒலிய வியல் எனலாம். மொழியின் சிறுகூறாகிய எழுத்தொலிகள் பற்றி ஒலியனியலும் பெருங் கூறாகிய பேச்சொலிகள் குறித்து ஒலியவியலும் ஆராய் கின்றன. Phonemics 400. ஒலியனியல் ஒலியியல், ஒலியனியல், ஒலி வரலாற்று ஆய்வு, எனச் சொல்லப் படுகின்றது. பொதுவான ஒலிகளைப்பற்றி ஒலியியல் – acoustics…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 378 – 395 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 371-377 இன் தொடர்ச்சி) 378. ஒண் செடியியல் Orchidology 379. ஒத்திசைவியல் Cohomology / Harmonology / Synchronology 380. ஒப்பனை யியல் 381. Cosmetology – எழிலியல், அழகியல், அழகு சாதனவியல், அழகுக் கலையியல் எனக் குறிப்பிடுகின்றனர். Cosmeto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடையும் அணியும் எனப் பொருள். Cosmetics என்றால் ஒப்பனை யியல் எனப் பொருள். ஒப்பனையியல் என்பது மேற்குறித்தவற்றை உள் ளடக்கியதாகும். எனவே, ஒப்பனையியல் – Cosmetology / Cosmetics எனலாம். Cosmetology /…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். ‘புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?’…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம், நூற்பயன் 31-37
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 26-30 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 31-37 31.கொடுமை யாமனுக் கோதுடை யாரியக் கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்? அடிமை வாழ்வி னகன்று விடுதலை அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே. 32.தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான் தமிழ ரென்னு முணர்வு தலைப்படும் தமிழர் யாரும் தலைக்கொளு வாரரோ. ++ மேவுதல்–விரும்புதல் ++ 33.கோதி லாத குழந்தை குதலையைத் தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்? ஈது நந்தமி ழின்கதை யேயிதை ஓது நாவனு முங்கள்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 371 – 377 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363-370 இன் தொடர்ச்சி) 371. ஏரணச் சொற் பொருளியல் Logical Semantics – தருக்க சொற்பொருள், ஏரணத் தொடரியல், ஏரணப் பொருண்மை யியல், தருக்க பொருண்மை யியல், முறைமைத் தொடரியல் எனப் படுகின்றது. Semantics குறி விளக்கவியல், சொற் பொருளியல், சொற் பொருள் அறிவியல் சொற் பொருள் ஆய்வியல், பொருண்மை யியல், மொழியி(ய)ல் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை, பொருளுணரியல், பொருள் தொடர்பியல் எனப்படுகின்றது. sémantique என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் சொற்பொருள் தொடர்பு என்பதாகும். சொல்லின் பொருள்பற்றிய…
ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 18 நாடக இலக்கியம் தொடர்ச்சி 4 ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள்பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று…
