மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு 2/2 தி.வே.விசயலட்சுமி
மன அமைதிக்கு மருந்து : நூல்களின் பங்கு 2/2 சிறந்த அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மாமேதை சாக்ரடீசுக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இளைஞர்களைச் சிந்திக்க வைத்த அந்த மேதை நஞ்சு அருந்தி இறக்க வேண்டும் என்பது தண்டனை. சாக்ரடீசு அதற்காகக் கவலைப்படவில்லை. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவந்தது. சிறையில் இருந்த சாக்ரடீசு அந்நாட்டின் ஒரு கவிஞர் எழுதிய கவிதைகளைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் வியந்து அவரிடம் படிப்பதற்கான காரணத்தைக்…
நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்
நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல் பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை, எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் –…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 3/3 – வாலாசா வல்லவன்
(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 தொடர்ச்சி) 3/3 15-2-1953 சென்னை மாவட்டத் திராவிடர் கழகச் செயற்குழு 22-2-1953 அன்று சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது.(விடுதலை 16-2-1953). அன்றே திராவிடர் கழக நடுவண் செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்து சென்னைக்கு வரும் அன்றே ‘தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்’ தமிழகமெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறைவேற்றியது. (விடுதலை 16-2-1953). திட்டமிட்டபடி இராசேந்திரப் பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 – வாலாசா வல்லவன்
(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 தொடர்ச்சி) 2/3 ஆந்திராச் சிக்கல் குறித்து திராவிடர் கழக நடுவண் மேலாண்மைக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்: (அ) ஆந்திர நாடு பிரிவினையில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிப்பதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்குழு தெரிவித்துக் கொள்ளுகிறது. அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது ஆளுநர் முதலியவை சென்னையிலிருக்க…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 – வாலாசா வல்லவன்
1/3 வழக்கறிஞர் பா.குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்கிற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் வரலாற்றுப் பொய்கள் பலவற்றையும் வரலாற்றுத் திரிபுகள் பலவற்றையும் செய்துள்ளார், அவர். அண்மைக் காலமாக ம.பொ.சி-யின் அடியாராக மாறியுள்ளதால், ம.பொ.சி.யின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது மாணவக் கோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரிய வேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ள…
நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்
சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,
