ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)  தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு…

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே!   அ.தி.மு.க. மூன்றாகப் பிளவுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. தீபா மாதவன் இக்கட்சியைச் சாராதவர். அவர் பக்கம் அதிமுக ஆதரவாளர் சிலர் போனாலும், இதைப் பிளவாகக் கூறமுடியாது. இரத்தத் தொடர்பு உறவு என்று மட்டும் ஒருவரை ஆதரிக்கும் முட்டாள்தனம் உள்ள சிலர் சில காலம் அவர் பக்கம் இருக்கலாம். அதனால், கட்சி உடைந்ததாகக் கூறமுடியாது.   பா.ச.க. ஆதரவு பன்னீர் செல்வம் பக்கம் சிலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கலைஞர் எதிர்ப்பு என்ற அதிமுக கொள்கையைச் சசிகலா…