பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – 3

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) ஆய்வகம்   ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தும்போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பேண வேண்டும். அவற்றை ஆய்வகத்தில் சேமித்து வைக்க கூடாது. வகுப்பறை   பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவை அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு அதாவது லூப்ரிகேசன்…

100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன்

‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100  புதுக்காணி நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார். அவர்  ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை…