தமிழ் வளர்த்த நகரங்கள் 10. – அ. க. நவநீத கிருட்டிணன்: மதுரை கடைச்சங்கம்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 9 – அ. க. நவநீத கிருட்டிணன்: நாயக்கர் அணிசெய்த மதுரை – தொடர்ச்சி) 6. தமிழ் வளர்த்த மதுரை கடைச்சங்கம் பைந்தமிழை வளர்த்தற்காகப் பாண்டியர் அமைத்த சங்கங்களில் மூன்றாம் சங்கமாகிய கடைச் சங்கம் இன்றைய மதுரையிலேயே இருந்தது. “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” எனவரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் இச்செய்தி வலியுறுவதாகும். இங்குத் ‘தமிழ் நிலை’ யென்று வரும் தொடர் தமிழ் நிலையமாகிய தமிழ்ச் சங்கத்தையே குறிப்பதாகும். இறையனர் களவியல் உரைப் பாயிரத்தால் கடைச்சங்கத்தைப்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 9 – அ. க. நவநீத கிருட்டிணன்: நாயக்கர் அணிசெய்த மதுரை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2-தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள் 9 கடைச்சங்கக் காலத்தில் பாண்டிய மன்னர்களால் கவின்பெற்று விளங்கிய மதுரைமாநகரம் பின்னைய நூற்றாண்டுகளில் அயல்மன்னர் பலருடைய படை யெடுப்புக்களால் அல்லற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டியநாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பாண்டியநாடு கடுங்கோனால் மீட்கப் பெற்றுத் தன்னாட்சி பெற்றது. திரும்பவும் பத்தாம் நூற்றாண்டில் அது சோழர் ஆட்சியின் கீழ் அடிமை யுற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சடாவர்மன் குலசேகரன் என்னும்…
கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்
கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு
கீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30
புரட்டாசி 19, 2050 / 7.10.2019 காலை 9.00-9.30 கீழடி குறித்து உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன் நெறியாளர் திரு பாண்டியன் தமிழன் குரல் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி
பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்
பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன் பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின்…
திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை
திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் தமிழ்நாட்டில் விசயநகர அரசர்களின் சார்பாளர்கள்(பிரதிநிதிகள்) 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் தலைமுறையினர் தென்பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விசயநகர ஆட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு இராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர். மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத…
அரபிக்கடலில் தமிழர் ஆட்சி! – மயிலை சீனி.வேங்கடசாமி
அரபிக்கடலில் தமிழர் ஆட்சி! அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப்பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத்தீவுகளில் அதற்கு முன்னர் ஆட்சி புரிந்து வந்த அரசர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்.1 மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப்போரில் ஈடுபட்டான்.2 கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும்,…
இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் – சீனி.வேங்கடசாமி
இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர் குடிச் சின்னமாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த அரசர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ண வேண்டியுள்ளது. குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன் மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை….
யவன நாட்டை ஆண்ட சேரன்!
யவன நாட்டை ஆண்ட சேரன்! சேரர்களால் பிணிக்கப்பட்ட யவனர்கள் யார் என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலைநாட்டுக் கடல் வணிகராகிய யவனர்கள் என்று சிலரும், வடநாட்டில் வாழ்ந்த சாக யவனர் என்று சிலரும் கருதுகின்றனர். சாக யவனரின் கூட்டத்தார் என்று கூறும் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளியலை வளப்படுத்திய மேலைநாட்டு வணிகக் குழுவினராகிய யவனரைப் பிணித்தான் என்பது பொருந்தாது என்கிறார். வடநாட்டு யவனர் வடுகரைப் போன்றும், ஆரியரைப் போன்றும் நேரே தமிழகத்தில் ஊடுருவாமல் அரபிக்கடல் தீவுகளுக்குச்…
கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி
கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…
சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் – மயிலை சீனி.வேங்கடசாமி
சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம். நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு…
மாமூலனார் பாடல்கள் – 12 : சி.இலக்குவனார்
கஉ. “ஆண்டு அமைதியாகத் தங்கி இரார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (மார்ச்சு, 16, 2014 இதழ்த் தொடர்ச்சி) அகநானூறு 201 – பாலை அம்ம! வாழி தோழி! பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித்துறை பரவப் பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை…
