நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும் அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும்…
வெருளி நோய்கள் 654-658: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 649-653: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 654-658 654. கம்பளி யானை வெருளி – Mammothphobia கம்பளி யானை எனப்பெறும் மிகப்பெறும் யானைமீதான பேரச்சம் கம்பளி யானை வெருளி. அடர்ந்த முடிகளால் உடல் மூடப்பட்டுள்ளதால் கம்பளி யானை எனப்பெறுகிறது. 4.8 பேராயிரம்(மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனம்.இப்பொழுது இல்லை. எனினும் இதனைப்பற்றிய செய்திகளை அறிய வரும் பொழுது படங்களைப்பார்க்கும்பொழுது பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். Mammoth என்கிற சொல் மன்சி என்ற உருசிய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும். ஆங்கிலச் சொல்…
73.சனாதனம் இருப்பதால்தான் கீழோர் எனப்படுவோர் உயர்பதவிகளில் அமர்கின்றனரா? + 74. காலில் பிறந்தவன் சூத்திரன் என்பது எங்ஙனம் இழிவு படுத்துவதாகும் என்கிறார்களே! + 75. திமுக, சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது” – எடப்பாடி பழனிசாமி – பொய்யும் மெய்யும்: இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 70-72 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 73-75 சனாதனத்தால்தான் கீழோர் எனப்படுவோர் ஒடுக்கி வைக்கப்பட்டனர். அவ்வாறிருக்க அதற்கு நேர்மாறாகத் துணிந்து கூறுவோருக்காகத்தான், “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனப் பாரதியார் பாடிச் சென்றார். “அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாய்ப் பகுத்தார்.” – மனு…
தோழர் தியாகு எழுதுகிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க….
(தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க… “வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!வாழிய வாழியவே!வான மளந்தது அனைத்தும் அளந்திடுவண்மொழி வாழியவே!ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழியவே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!என்றென்றும் வாழியவே!சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையகமே!தொல்லை வினைதரு தொல்லை அகன்றுசுடர்க தமிழ்நாடே!வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழிவாழ்க தமிழ்மொழியே!வானம் அறிந்த தனைத்தும் அறிந்துவளர்மொழி வாழியவே! இது பாரதியார் எழுதிய தமிழ்மொழி வாழ்த்து என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் ஆழமான உட்பொருளை…
தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும்மொழியும் 32: பிறநாட்டார்ஆட்சிக்காலம் – தொடர்ச்சி) 9. மக்களாட்சிக் காலம் ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து…
அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!
அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! – இலக்குவனார் திருவள்ளுவன் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . . எத்தனை பேர்…
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3
(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி) செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்….
பாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்!
தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!
ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார். பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார்…
புதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய பாடத்திட்டம் : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில் எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை. பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம்…
