தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும் கெடுத்து விடவில்லை – மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும்  கெடுத்து விடவில்லை   பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான மூன்று பாவினங்களை அமைத்துப் பன்னிருவகையான செய்யுட்களை உண்டாக்கினார்கள். பழைய ஆசிரியப்பாவோடு ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்றும் வெண்பாவோடு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்றும், கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்றும் பாவகைகளை வளர்த்தார்கள். பாவினங்களின் அமைப்பு திடீரென்று அமைந்து விடவில்லை. அவை சரியானபடி முழு உருவை அடைவதற்குப் பல ஆண்டுகள், சில…

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 3 – மறைமலை இலக்குவனார்

(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி)    பேராசிரியரின் கருதுகோளை இற்றைத் தொல்லியல் வளர்ச்சி நிலையில் மீள்ஆய்வு செய்யவேண்டும். நூலுள் நுவலப்பட்டுள்ள செய்திகள் பண்பாட்டுமானுடவியல்,  கல்வெட்டியல், தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலாகப் பேராசிரியரின் கருதுகோள் விளங்குகிறது. செம்மொழி ஆய்வுக்குச் சிறப்பான ஆற்றுப்படையாகக் கீழ்வரும் இயல்கள் திகழ்கின்றன எனலாம்: பழந்தமிழ் (ப. 26-42) பழந்தமிழ்ப்புதல்விகள் (ப. 65-95), பழந்தமிழ் இலக்கியம் (ப. 96-116), பழந்தமிழ் நிலை (ப. 117-141), பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் (ப. 142-157), பழந்தமிழ்ச் சொல்லமைப்பு (ப….