தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ)     சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.   “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.  இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக்…

குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன்

1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா! குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா! பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா! பறையின்றி நடைபோடும் படையே அம்மா! உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா! ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா! பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ! 2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள் நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச் செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்? செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக் கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும் குலையாமல் தளராமல் தமிழைக் காத்த அஞ்சாத அடலேற்றைப் புலியின் போத்தை, அருந்தமிழை, ஆரமிழ்தை இழந்தோம்…