தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல். தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது. 10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…
இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 75, திருவாரூர்
வைகாசி 11, 2047 / மே 24, 2016 மாலை6.30 – 9.00 சிறப்புரை : பெ.மணியரசன் – முடியவில்லை மொழிப்போர்
உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைச் சிறையில் அடை !
உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை ! உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு ! தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்கத் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 11.03.2047 / 24.03.2016 காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. உழுபொறி எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய…
சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!
தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31. தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…
ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!
“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா – கருத்தரங்கம், மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது. சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…
மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3
மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 3 [embpicasa id=”6247672828271956033″] (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2
மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 2 [embpicasa id=”6247671458763018753″] (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3
மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1
மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் [embpicasa id=”6247669920340483393″] (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3
இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை. ஆனால்,…
மொழிப்போர் 50 மாநாடு, மதுரை
தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/ மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்! வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில் தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்! பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…
இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்
பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…
“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா!
“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா! மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மனைவியுமான தோழர் இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” நூல் வெளியீட்டு விழா, சென்னையில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 காலை சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. 1970களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை…
