தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்!   பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின்  ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு  ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல!   தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு)  தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் சி.டி.நாயுடு என அழைக்கப்பெறும் அறிவியல் அறிஞர் கோ.துரைசாமி அவர்களும் போட்டியிட்டனர். பெருந்தலைவர் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் இலக்குவனார், அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டிற்கே நலம் பயக்கும் என அவருக்காக முனைப்பான பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரிச் செயலர் திரு…

முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள்   அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களை மறு தேர்தல் என்றோ இடைத்தேர்தல் என்றோ குறிப்பிடுகின்றனர். இரண்டு பொதுத்தேர்தலிடையே நடை பெறும் தேர்தல் இடைத்தேர்தல்  என்ற வகையில் இது சரிபோல்தான் தோன்றும்.   தேர்தல் நடைபெற்று – அஃதாவது வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் அல்லது தொகுதியில் நடைபெறும் தேர்தல்தான் மறு தேர்தல். தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் மறைவால் நடைபெறும் தேர்தலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில்  ச.ம.உ. விலகியதால் ஏற்படும் தேர்தலும் இடைத்தேர்தல்கள்.    அரவக்குறிச்சி,…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40 சின்னச்சாமி   1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக…