தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 25, 26 & 27: இணைய அரங்கம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர் சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன் புலவர் ச.ந. இளங்குமரன் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09…

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~3/3 : இ.பு.ஞானப்பிரகாசன்

(நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 தொடர்ச்சி) நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~3/3    எல்லாப் பூசைகளும் தமிழ்ப் பூசைகளே!  அன்றைய நடுகல் கடவுள்களும் இன்றைய கோயில் கடவுள்களும் வேறல்ல என்பது மட்டுமில்லை, அந்த நடுகல் பூசை முறைக்கும் ஆகம முறைப்படி இன்று கோயில்களில் பிராமணர்கள் செய்யும் பூசை முறைக்கும் கூட ஏறத்தாழ வேறுபாடு என்பதே இல்லை!  நடுகல்லாக இருந்தபொழுது ஆண்டுக்கு ஒருமுறையோ சிலமுறையோ மட்டும் அந்தக் கற்கடவுளை வணங்குவார்கள். அதனால், மாதக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுக்கடைந்து போன…

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

(நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 தொடர்ச்சி) நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3   கடவுளைப் பூசிப்பதில் தமிழர்களுக்கே உரிய தனித்தகுதிகள்!   “தமிழர்களுக்கு எனத் தனிச் சமயம் கிடையாது. இந்து சமயமே தமிழர் சமயம்! தமிழர்கள் இந்துக்களே! தமிழ்ச் சமயம் என்பதும் இந்து சமயத்தின் ஒரு பகுதியே!” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள் இந்து சமய அடிப்படையாளர்கள். ஆனால், இந்து சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் அடிப்படையிலேயே பெருத்த முரண்பாடு உண்டு!   “கடவுள் என்பவர் அனைத்து வல்லமைகளும்…

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3   கடவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?…  கடவுள் மீது அன்பு(பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான்…

ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்

சித்திரை 13, 2048 /புதன்/ ஏப்பிரல் 26, 2017 மாலை 6.00  இரசியப்பண்பாட்டு அறிவியல் மையக்கண்காட்சி அரங்கம் சென்னை 600 006 ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்  தி.க.ச.கலைவாணனின் ‘மனைவி அமைவதெல்லாம்’  நூல் வெளியீடு  விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கல்    

பாரதியைப் போற்றுநாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

பாரதியைப் போற்றுநாடே!  பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்த முன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே! மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே! மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே! தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே!   – மாம்பலம் ஆ.சந்திரசேகர், எழுத்தாளர்    

மேன்மையாய் வாழ்வோம்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

மேன்மையாய் வாழ்வோம்! செய்திகள் படிப்போம் சிந்தனை நிறைப்போம்! கைத்தொழில் கற்போம் கவலையை ஒழிப்போம் பொய்சூது விடுவோம் போதும்மனம் கொள்வோம் மெய்யைப் பேசுவோம் மேன்மையாய் வாழ்வோம்! வைகறை விழிப்போம் வாய்விட்டுச் சிரிப்போம்! பைகாசு வைப்போம்! பைய நடப்போம்! வாய்மை காப்போம் வாக்கு நிறைவேற்றுவோம்! தாய்மை போற்றுவோம்! தாரத்தை ஆராதிப்போம்! நாய்தனை வளர்ப்போம்! நன்றியை மறவோம்! வாய்ச்சவடால் செய்யோம்! வாலிபனாய் வாழ்வோம்! எய்அம்பாய் மெய்செய்வோம்! எங்கும்சென்றே நலமாக்குவோம் நய்நய்என நச்சரியோம்! நண்பர்களைச் சேர்த்திடுவோம்! பாய்விரித்தே படுத்திடுவோம் பஞ்சுமெத்தை தவிர்த்திடுவோம்! நோய்நொடி விரட்டிடுவோம் நூறைக்கடக்க வழிகண்டோம்! மாம்பலம் ஆ.சந்திரசேகர்…

இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! பேதைப் பருவத்தில் காதைத் திருகாதே! வாதைச் செய்தேயவர் வசந்தம் திருடாதே! பாதை பள்ளம் கல்லுமுள்ளு ஓடட்டும் ! மேதை மேன்மை இங்கே ஆரம்பிக்கப்படும்! மரம் ஏறியே மார்பு தேயட்டும்! கரம் சிறாய்ப்பு வலியும் அறியட்டும்! நீச்சல் அவசியம் கற்றுத் தேறட்டும்! காய்ச்சல் வந்தாலும் மழையில் நனையட்டும்! மேய்ச்சல் மாடுகளை ஓட்டி மகிழட்டும்! பாய்ச்சல் செய்தே ஆற்றில் நீந்தட்டும்! சாளரச் சிறை ஞாயிறாவது திறக்கட்டும்! காலற ஓடியாடி ஆனந்தமாய் ஆடட்டும்! பாலர் காலம் நினைவில் பதியட்டும்! கோளாறு செய்யாதே இயற்கையா…

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா: “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்

  மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்   [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]    

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்: மறைமலை இலக்குவனார்

மாம்பலம் ஆ.சந்திரசேகரின்  “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்    ‘கவிதை என்பது கருத்துகளை விளக்கமாக மனத்தில் தைக்கும்படிக் கூறுவது.’ ‘வாழ்வின் எதிரொலியே கவிதை’ சமகால வாழ்வின் சரியான படப்பிடிப்பு’ என்றெல்லாம் கவிதையைப்பற்றிய  எண்ணற்ற விளக்கங்களும் வரையறைகளும் வழங்கிவருகின்றன.   குழந்தையின் குறுநகை ஒரு கவிதை; காலைக் கதிரவனின் கோல எழில் ஒரு கவிதை; மாலைநிலாவின் மயக்கும் எழில் ஒரு கவிதை என்று நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம்மை ஈர்க்கும் நயமும் எழிலும் சுவையும் திறனும் கொண்ட அனைத்துமே கவிதைகள் தாம். அக் கவிதைகளைச் சுவைக்கத் தெரிந்தால்…

பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

தனக்குத் தானே கட்டிக்கொள்! பறவையே பெருந் தச்சன்! பாரினில் முதல் சிற்பி! திறமையாக கட்டும் கலைஞர் ! தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்! சிறகுதான் பறக்கும் விமானம்! சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்! உறவுக்கு சொந்த இல்லம்! உலகுக்கே வீட்டுப் பாடம்! கட்டுமான வீட்டின் அடித்தளம் எட்டடி தோண்டினாலும் விழுதே! கற்றுக்கொள் பறவை பாடம் ! கல்வியதுவே தொழில் நுட்பம்! விட்டுவிட்டு வீசும் தென்றல் ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் ! ஒட்டிகிளையில் விழாத கூடு!. முட்டைவிழா அற்புத வீடு ! தொங்கும் தோட்டக் குடிலில் தங்கிவசிக்க ஆசைக்…