அகநானூற்றில்  ஊர்கள் : 6/7- தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)     அகநானூற்றில்  ஊர்கள்  – 6/7     நீடூர்                 எவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,                 “யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்                 …………..எவ்வி ஏவல் மேவார்”                           (அகநானூறு 260)                 “பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன”            (அகநானூறு 366)…

சங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

சங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’ “சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி: உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள்? நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த…