வெருளி நோய்கள் 1426 -1430: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1421 -1425: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1426 -1430
- நல வாழ்வு வெருளி – Hygeiophobia
நல வாழ்வு தொடர்பான அளவற்ற பேரச்சம் நல வாழ்வு வெருளி.
பெரும்பாலும் தூய்மையின் மீதான மிகுதியான நாட்டம், நோய்வாய்ப்படுவோமோ என்ற பெருங்கவலை ஆகியவற்றால் உருவாகும் தேவையற்ற பேரச்சம்.
தோய்நிலை வெருளி(Hagiophobia) நோய் வெருளி, நோய்மி வெருளி உள்ளவர்களுக்கு நலவாழ்வு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- நலமிலி வெருளி-Panthophobia / Pathophobia
நலக்குறைவு குறித்த அளவுகடந்த பேரச்சம் நலமிலி வெருளி.
காய்ச்சல், நோயால் வருந்துதல் முதலியவற்றால் பெருங்கேடு விளையப்போவதாக அஞ்சும் பொழுது நலமிலி வெருளி வருகிறது.
patho என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வருந்துதல் எனப் பொருள். இங்கே நோயால் வருந்துவதைக் குறிக்கிறது.
00
- நவம்பர் வெருளி – chapitgoephobia
நவம்பர்(November) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் நவம்பர் வெருளி.
Shஅyī yuè என்னும் சீனச்சொல்தான் 11ஆவது மாதம் என்னும் பொருளில் நவம்பரைக் குறிக்கும்.
00
- நள்ளிரவு வெருளி – Midnightphobia
நள்ளிரவு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நள்ளிரவு வெருளி.
இருட்டு குறித்து அஞ்சுவோருக்கு நள்ளிரவு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
காண்க இரவு வெருளி(Noctiphobia)
00
- நற் செய்தி வெருளி – Euphobia
நல்ல செய்தியைக்கேட்கும் பொழுது உருவாகும் அளவு கடந்த பேரச்சம் நற்செய்தி வெருளி.
பிறருடைய மகிழ்ச்சியையும் பிறருடைய மகிழ்ச்சியையும் பகிர்வதற்கு இயலாதவர்களாக இருப்பார்கள்.
Euphobia என்பதை விடியல் வெருளி என்னும் பொருளில் ஒருவர் குறித்துள்ளார். துயரங்கள் எப்பொழுது தீரும் என்பதற்கு விடிவுக் காலம் எப்பொழுது பிறக்கும் என்று சொல்லுவோம். இருளில் இருந்து ஒளிபிறக்கும் பொழுதை விடியல் என்கிறோம். அதுபோல், துயர இருளில் இருந்து நற்கால ஒளி பிறப்பதைக் குறியீடாக விடியல் எனச் சொல்வதை எண்ணி இவ்வாறு குறித்திருக்கலாம். எனினும், விடியல் வெருளியைக்குறிப்பிடும் வகையில் வைகறை வெருளி என உள்ளதால், நேரடியாக நற்செய்தி வெருளி என்பதே சரியாக இருக்கும்.
eu என்னும் கிரேக்கச் சொல் நன்மையைக் குறிக்கிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply