இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி   இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும்.   இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும்

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி) 2.  மொழிகளும் மொழிக்குடும்பங்களும்   உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ  ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.  இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன;  இன்றும் உயிருடன் வாழ்கின்றன.             1.செருமன்…