வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு! – புலவர் தி.வே. விசயலட்சுமி

வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு!   ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தி, சிலப்பதிகாரம் முதலிய சில நூல்களின் உரையில் இதிலுள்ள சில பாடல்கள் காணப்படுகின்றன.   காப்பியக் காலத்தில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நவகோடி நாராயணன் என்ற வைசியன் வேறுகுலப் பெண்ணை மணந்து கொள்கிறான். அதனால் அவனைச் சார்ந்தோர் வெறுக்கவே, மனைவியை விட்டு அயல்நாடு சென்று விடுகிறான். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த…

வாழி நெஞ்சே! – வளையாபதி

 நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக்கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல் சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே ! வளையாபதி