ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும், சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும், காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால், நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல், நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்!   போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால், தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால், சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து, சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி, வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி, பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்! மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து எழுந்து, நூதனமாய்ச் சிந்தித்து நல்லவரைத் தேர்ந்து, சோதிநிறை நன்னிலமாய்…

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2      உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.     சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…

வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை

  வேட்பாளர்களும்  வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை     வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.   வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.   தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு  (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.  …

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!   தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர்.   நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…