மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்

மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.   மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…

கொடுவாளெடுக்கத் தயக்கமேன்? – வாணிதாசன்

தமிழ்மறை போற்று கின்றீர்: சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்; தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ தயங்குகிறீர்! மனமே இல்லை! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலைசாய்த்து வாழ்வதற்குத் தமிழரில் ஒருசி லர்கள் சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன்? மனமே இல்லை! வாணிதாசன்

தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்

செய்யும் விளைந்தது; தையும் பிறந்தது; செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! – புதுச் செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! பொய்கை புதர்ச்செடி பூக்கள் நிறைந்தன; பொன்னொளி எங்கணுங் கண்டோம்! – புதுப் பொன்னொளி எங்கணுங் கண்டோம்! மாவும் சுளைப்பலா வாழையும்   செந்நெலும் வந்து குவிந்தன வீட்டில்! – தை வந்தது வந்தது நாட்டில்! கூவும் குயிலினம் கூவாக் குயிலினம் தாவிப் பறந்தது மேல்வான்! – ஒளி தாவிப் பறந்தது கீழ்வான்! சிட்டுச் சிறுவரின் செங்கைக் கரும்புகள் தொட்டுப் பிசைந்தன பொங்கல்! – அதை இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!…

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…