செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு

செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு   மாலைமுரசு விகடன்  மலேசியாவில் தமிழ் இணைய மாநாடு! இரா.தமிழ்க்கனல்   மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், வரும் ஆகத்து 26 முதல் 28-ஆம் நாள் வரை, ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ நடத்தப்படுகிறது.   சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, மாநாட்டின் இணைத்தலைவர் முனைவர் இலட்சுமி கார்மேகம், நெறியாளர் திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.   மலேசியாவில், பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியல்…

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்! – ந.அருண் பிரகாசு இராசு

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்!    ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது.   மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்….

உண்ணாநோன்பைக் கைவிட்ட உதயகலா!

தனிமைச் சிறையில் இருந்து விடுவிப்பு! ஈழத் தமிழப் பெண் உதயகலா உண்ணாநிலையைக் கைவிட்டார்!   தனிமைச் சிறையில் இருந்து தன்னைக் காவல்துறையினர் விடுவித்ததை அடுத்து, ஈழத் தமிழ்ப் பெண் உதயகலா உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.   இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராசு என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஏதிலியராக தனுசுக்கோடிக்கு வந்தார். தயாபரராசு, அவர் மனைவி உதயகலா, மூன்று குழந்தைகள் ஆகியோரிடம் உசாவிய (விசாரணை நடத்திய) காவல்துறையினர், தயாபரராசு மீது கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்…

நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார்

(சித்திரை 29, 1986 /12 மே 1955 – தை 06, 2047 / 17 சனவரி 2016) ஓய்ந்தது உரிமைக்குரல்   நாட்டரியல் ஆய்வாளரும் நாட்டுப்புறக்கலைஞரும் நாடக ஆசிரியரும் நடிகரும் நாடகத்துறைப் பேராசிரியருமான முனைவர்  உடல்நலக் குறைவால் இன்று தன் 60 ஆம் அகவையில் புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.   கே.ஏ.குணசேகரன் என அழைக்கப்பெறும் இவர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர்; இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு…

தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி

தாமரையின் ஊழல் இதழ்கள் !  – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…

அமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்!- விகடன் வாசகர் விசயலட்சுமி

     அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற இசைவு பெற (புகவுச்சீட்டு -விசா) நேர்காணலுக்கு அமெரிக்கத்தூதரகம் (Cஒன்சுலடெ) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் மறுமொழி அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.   நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் ‘குட் மார்னிங்…