தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்! தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் ‘அகரமுதல’ முதலான பல இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் செய்தியாளரும் கட்டுரையாளரும் ஆன வைகை அனீசு மறைந்து 3 திங்கள் ஆகின்றது. அவர் பிரிந்ததை இன்னும் உணராச் சூழலில் குடும்பத்தினர் இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டிற்கு ஐந்தாம் வகுப்பு பயிலப்போகும் மகனுக்கு [செல்வன் அகமது இன்சமாம் உல் அக்கு – Ahmed Inzamam-ul-Haq] உரூபாய் 28.000,…
தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்!
அன்னையிடம் சென்றாயோ நண்பா! அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம். நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி…
குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்
குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள் தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு,…
அரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை!
முதலக்கம்பட்டி ஊராட்சியில் அரசால் வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர் முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி…
நாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு
அறிவியலுக்கு அறைகூவலிடும் நாட்டுப்புற நம்பிக்கைகளும் சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும் நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, முகில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு…
துலுக்கப்பயலே! 7 -வைகை அனிசு
(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி) 7 துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள் தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள்…
துலுக்கப்பயலே! 6 -வைகை அனிசு
(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 தொடர்ச்சி) 6 பழமை மாறாத இந்து மரபைப் பின்பற்றும் இசுலாமியர்கள் சமயம் மாறினாலும் இந்துக்கோட்பாட்டின் படி இந்துக்கள் செய்கின்ற சடங்குகளை இன்றளவும் இசுலாமியர்கள் செய்துவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலத்தெய்வம் இருப்பது போல இசுலாம் மார்க்கத்திற்கு வந்தவர்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்த சடங்குகள் போல மாயாண்டி துணை, கருப்பாயி துணை, எடமலையான் துணை, பதினெட்டாம்பட்டியான் துணை, காமாட்சியம்மன் துணை என்றெல்லாம் ஏகப்பட்ட குட்டித் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள். இந்துக்கள், இதே போன்று …
கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு
பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு! பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…
துலுக்கப்பயலே! 4 -வைகை அனிசு
(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 4 தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…
குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள். நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில்…
கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு
குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள் தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…
இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு
இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர் வாழ்வில் இனி்மை இல்லை! ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை…
