திருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு
கவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன். இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது. தமிழக மக்களின் பழங்கலைகளில், கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை. திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி இணையரின் மகனாவார்; சென்னை…