திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 131. புலவி தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர், கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும் (01-05 தலைவி சொல்லியவை) புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. அவர்படும் துயரைக் காண்போம் சிறிது; மனமே! நீ வேறுபடு. 1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல். உணவில் உப்பின்…