ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி) ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என்…