கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer
60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer ஒப்ப(9) என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஒப்ப(17), ஒப்பது(1), ஒப்பார்(2), ஒப்பின்(1), ஒப்பின(1),ஒப்பினை(1) என்பன போன்று ஒத்த என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவர் கருத்தும் ஒப்ப இருக்கும் உடன்பாட்டையும் பின்னர் இது குறித்துள்ளது. இதனடிப்படையில் ஒப்புமொழி என்பது அக்ரிமெண்ட்டை-agreement-குறித்துள்ளது. இச்சொல்லிற்கு வேளாணறிவியலிலும் கால்நடைஅறிவியலிலும் உடன்படிக்கை என்றும், மொழியியலில் உடன்பாடு என்றும், ஆட்சித்துறையில்உடன்பாடு, உடன்படிக்கை, இசைவு, இணக்கம் என்றும், தொல்லியல்துறையில் இயைபு, ஒப்பந்தம் என்றும், மனையியலில் இசைவுப்பத்திரம், உடன்படிக்கை என்றும் வெவ்வேறாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்திலும் பொதுவாக…