101. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia  கருதி (2), கருதிய (1), கருதியது (1), கருதியாய் (1), கருதின் (1), கருதுபு(1), கருதும் (2), கருதுவிர்(1) என்னும் சொற்களைச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். எண்ணிக் கருதுவதால் வருவதுதானே கருத்து. சிலருக்குக் கருத்தைக் கேட்டாலேயே தேவையற்ற பேரச்சம் ஏற்படும். கருத்துகள், அறிவாராய்ச்சித் திறன் ஆகியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia 102. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia   கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633) கழுது புகவயர…