இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தித்திணிப்பு: தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? இந்தித்திணிப்பு என்பது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1918 இல் தென்பாரத இந்திப் பரப்புரை அவை (‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’) என்னும் அமைப்பு தொடங்கியபொழுதே தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்ததும் வேரூன்றியது. இந்தியா, குடியரசானதும் கிளை பரப்பியது. 1965 இல் இந்தியா என்றால் இந்தி என்பது முழுமையாக மாறும் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முன்னெடுப்பால் கிளைகள் பரவாமல் வெட்டப்பட்டன. எனினும் அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தி …
தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே! இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்களிப்பையோ, உணர்ச்சியூட்டி வழி நடத்திய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலான தலைவர்கள், தொண்டர்கள் பங்களிப்பையோ யாரும் குறைக்கவோ மறைக்கவோ முடியாது. எனினும் ஆட்சி இருக்கையில் அமர்ந்த பின்னர் எதிர்ப்புகளைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கும் போக்கில் கலைஞர் கருணாநிதி மாறியது தமிழுக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்காய் அமைந்தது. இந்தி எதிர்ப்பு என்று சொன்னவுடன் எதிர்த்தரப்பார் என்ன சொல்கின்றார்கள்? “இந்தி தெரிந்ததால் மாறனை அமைச்சராக்கினேன்! இந்தி அறிந்ததால் தயாநிதி மாறனை…
தமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்! தவறான ஒன்றைச் சரியென நம்பும் மாயை பலரிடமும் உள்ளது. அதுபோன்ற மாயைதான் தமிழ் 99 விசைப்பலகையைச் சரியென நம்புவதும். அரசு, வல்லுநர் கருத்தை ஏற்பது என்ற முடிவில் மாயையை மெய்யென நம்பிய இத் தவறான கருத்தை ஏற்றுக் கொண்டது. இதன் விளைவாக, ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில், (தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக்…
கருத்தரங்கம் 3 :இந்தியால் தமிழுக்குக் கேடு…..! – கவிஞர் அரங்கசாமி
இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின் – பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம் ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால் தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால் வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா? இந்தியா என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா? நேருவைத் தலைவராகக் கொள்வதும் காமராசரைத் தலைவராகக் கொள்வதும் அவரவர் விருப்பம், அதனால் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதன்று. மொழியால் தமிழைப்பெற்று, நாட்டை இந்தியா என்றால், இந்தி மொழி…
கருத்தரங்கம் 4: இந்தியால் தமிழுக்குக் கேடு….! – விழியூர் இளவரசன்
தமிழன்பர் திரு. இலிங்கம் அவர்களுடைய கேள்விகளுக்கு விடை எழுதுமுன், நாம் பிறக்கும்போதே நம்மோடு பிறந்த தாய்மொழியான தமிழ், நம்மைப் பெற்ற தாய்போலும் தெய்வம் என்றும், நம் எண்ணங்களை உலகோருக்குத் தெரிவிக்க உறுதுணையாய் நின்று வாழவைக்கும் ஒப்பற்ற தெய்வம் என்றும், இத்தகைய தாய்மொழியை வணங்கிக் காக்க மறப்பது தமிழ் மரபுக்கு ஒவ்வாத கொடுமை என்றும் கூறித் தொடங்குகிறேன்… -விழியூர் இளவரசன் 1. இந்தியால் தமிழ் எந்தவகையில் அழிந்தது? அழிகிறது? அழியும்? வீட்டுக் கூரையின் ஓர் மூலையில் தீப்பற்றினால், மூலையில்தானே தீப்பற்றிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பது அறிவுடைமை…
செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்
1. செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி! தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ! வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ! தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்! தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்! அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம் யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே? 2. தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித் தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக் கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்…
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!
– தமிழ்ப் புரவலர் தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே! (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…
கருத்தரங்கம் 6 :இந்தியால் தமிழுக்குக் கேடு…! – க. அ.செல்வன்
வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். 1. அழிவுக்கு உண்டான வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல் சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம் பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமைகள் நம்மைப் பயமுறுத்துகின்றன எனபதை இதோ பாரும். ‘‘தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் இந்தியைக் கட்டாய பாடமாக்குவதே என் முதல் வேலை. அதனை எவ்வகையிலும் செயல்படுத்தியே தீருவேன்’’…
கருத்தரங்கு 5 : இந்தியால் தமிழுக்குக் கேடு…!
– பி.சு.தங்கப்பாண்டி குலசேகரப்பட்டி 1. ‘இந்தி படித்தால்தான் நடுநிலையரசில் பதவிகள் பெறமுடியும்’ என்ற உணர்வு மாணவ உள்ளங்களில் தூண்டப்படுகிறது. நம்மவர் படிப்பது பதவிக்குத்தான்; அறிவோடும் தன்மானத்தோடும் வாழவல்ல. இதனால் தமிழார்வம் கொண்டோரும், தமிழால் பயனில்லையோ? என்று எண்ண வேண்டியுள்ளது. இதற்குத் தமிழ் அழிந்ததோ, இல்லையோ, தமிழை வளர்க்க வேண்டியோரின் உள்ளங்கள் அழிந்ததாயின. அழிகிறது; இதே நிலைமை நீடித்தால் அழியும். 2. இந்தியா ஒரு தனியாட்சி நாடாக இருந்தால் மாநிலங்களின் தொடர்பிற்குரிய மொழி இந்திதான். அதை ஒப்புக் கொள்வது தவறல்ல. ஏனெனில் தனியாட்சிதானே! ஆனால் இந்தியா…
கருத்தரங்கு 2: இந்தியால் தமிழுக்குக் கேடு…!- ச.சிவசங்கர்
ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும். – ச.சிவசங்கர். 1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு…
