உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5- ப. மருதநாயகம்
(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5 15. அகழ்வாய்வாளர்கள் நிறைவாகப் பதினைந்தாவதாக அகழ்வாய்வாளர்கள் குறித்த கட்டுரையை அளித்துள்ளார். “ஓர் இனத்தின் தொன்மைபற்றியும் பண்பாட்டின் தனிச்சிறப்பு பற்றியும் பேசுவதும் எழுதுவதும் தேவையா? அவ்வாறு செய்வது பிற இனங்களுக்கு அதன்பால் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வளர வழி செய்வதாகாதா? பழம் சமுதாய, மொழி, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றைக் கிளறி உண்மை யறிய முயல்வதால் ஏதேனும் நன்மை உண்டா?” எனத் தொன்மை வரலாற்றுச் சிறப்பு…