“கல்வியே கண்”     செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட வெல்லும் அடலேறாய் விஞ்சிட – தொல்லுலகில் யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல வேண்டுமே கல்வி விளக்கு! சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற நீதி நிலத்தில் நிலைத்திட! – ஆதியிலே ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற வேண்டுமே கல்வி விதை! கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச் சொல்லி மகிழும் சுடர்க்குறளே! – முல்லைமலர்க் காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும் ஏடொளிரும் வண்ணம் இரு! நல்லோர் திருவடியை நாடி நலமெய்த! வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! –…