பிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா!

பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப்  பொங்கல் விழா!     தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு  முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.   தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்   ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை   செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள்,  பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை  அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.    நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…