சமற்கிருதமா? மீண்டும் ஒரு சண்டமாருதம்! – நக்கீரனில் தமிழ்க்கனல்
மீண்டும் தமிழுக்கு அவமதிப்பா எனக் கொதிக்கிறார்கள், தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும்! சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு.. தமிழகமே எதிர்க்க.. அது நீக்கப்பட்டது. அந்தச் சூடு ஆறாதநிலையில், சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டு உசுப்பிவிட்டிருக்கிறது, தில்லி. நாடு முழுவதும் உள்ள மத்திய பள்ளிக்கல்வி வாரியப் (சி.பி.எசு.இ) பள்ளிகளில், வரும் ஆகசுட்டு 7-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள்வரை, ’சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு வாரியத்தின் இயக்குநர் சாதனா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சூன் 30-ஆம் நாளிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், அப்படி…
சமற்கிருத வாரக் கொண்டாட்டங்கள் கூடா:இராமதாசு எதிர்ப்பு
தமிழகத்தில் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எசு.இ. நிருவாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எசு.இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள் வரை சமற்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும்…
மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவு: வைகோ ஆவேசம்
மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத மொழி, பண்பாடு,கலை ஒழுகலாறு திணிக்கப்படுவதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education-CBSE) இயக்குநர் சாதனா பராசுகர், சூன் 30, 2014 நாளிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டிலுள்ள 15 ஆயிரம் சி.பி.எசு.இ. பள்ளிகளிலும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள்…
பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு
பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….
சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்!
மத்திய அரசின் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்! நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குநர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள நடுவண் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும்…