சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 2 நோக்கம் இன்றைய அறிவியல் சொற்கள் யாவும் சங்க இலக்கியங்களில் உள்ளன என நான் உரைக்கவில்லை. பின்வரும் அடிப்படையில் சங்கச் சொற்களைப் பயன்பாடுள்ளனவாக ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். இன்றைக்குக் கையாளும் அதே பொருள் உள்ள சங்கச் சொற்களை நாம் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். சான்றாகப் பூக்காத தாவரம் என நாம் சொல்கிறோம். அதே பொருளில் கோளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்…