தீயக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! கச்சத்தீவை மீட்போம்! – முதல்வர்
முதல்வர் செயலலிதா தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் முதல் நாளில்(11.012.13), முதல்வர் செயலலிதா தொடக்கவுரை யாற்றினார். அப்பொழுது, தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும் தீயக்குழுக்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செயலலிதா தெரிவித்தார். “ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், மிகவும் நலிவுற்ற பிரிவினர் நலன் ஆகியவற்றுக்காக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. தமிழகம் தேசிய அளவில் பல…