இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா?   2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் செயற்பட்டுவந்தது. 2008 மே 19 முதல் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தனித்துச் செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட பொழுது அதன் இயக்குநரே இதன் இயக்குநராக இருந்தார். சென்னைக்கு இவ்வலுவலகம் மாற்றப்பட்ட பொழுது முனைவர் ப.மருதநாயகம் இதன் பொறுப்பு அலுவலராக அமர்த்தப்பட்டுச் செயல்பட்டு…