தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தொடர்ச்சி) தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்! – தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 ஆவின் தயிர் உறைகளில் தஃகி என இந்தியில் குறிக்க வேண்டும் எனச் சில நாள் முன்னர் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) அறிவித்தது. முதல்வர் மு.க.தாலின் உடனடியாக எதிர்வினையாற்றித் “தொலைந்துவிடுவீர்கள்” என எச்சரிக்கை விட்டுள்ளார். (வழக்கம்போல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மரு.இராமதாசுதான்.) முதல்வர் கண்டனம் தெரிவித்து இந்தித்திணிப்பு முயற்சிக்குத் தயிர் உறைகளில் முற்றுப்புள்ளி…