தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு   தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.  செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும்…

கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்-இலக்குவனார் திருவள்ளுவன்

கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்  எல்லார்க்கும் எல்லா நிலைகளிலும் எல்லாப்பணிகளிலும் கணிப்பொறி என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, கணிப்பொறி பயன்பாடு சார்ந்த அறிவியலறிவு நமக்குத் தேவை. தொன்மை வாய்ந்த தமிழ் மொழி புத்திளமையுடன் திகழக் கணிப்பொறி பயன்பாடு தேவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கணிப்பொறிப் பயன்பாட்டைத் தமிழில் அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தவும் கூடிய கணித்தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர்களில் குறிப்பிடத்தக்கவராகப் பேராசிரியர் முனைவர் ந.  தெய்வசுந்தரம் உள்ளார். பேரா. ந. தெய்வசுந்தரம் பயன்பாட்டு நிலைகளிலும் ஆய்வு நிலைகளிலும கணியன்களை(softwares) உருவாக்கித் தமிழுலகம் பயனுற உழைக்கிறார். அ)…

செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி! – இலக்குவனார் திருவள்ளுவன்

செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி!   18ஆம் நூற்றாண்டில் ‘பொன்பரப்பியனான வனகோபரன்’என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட ஊரே ‘பொன்பரப்பி’. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொன்பரப்பி ஊர் தமிழர் உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளதுபோல் செம்மொழி வினைவலர் இராமசாமி பிறந்தமையால் செம்மொழிச் செயலாக்க வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது. ‘செம்மொழியார்’, ‘செம்மொழிச்  செம்மல், எனச் செந்தமிழரால் போற்றப்படும் அறிஞர் செம்மொழி இராமசாமி பொன்பரப்பியில் ஆவணி 26, தி.பி.1980/10.09.1949 அன்று பிறந்தார். படிப்பும் கல்விப் பணியும் ஆய்வுப்பணியும்    தான்பிறந்த ஊரான…

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார்.  எனவே தனிப்பட்ட முறையில் சொந்தப்பணம் உரூ 1 கோடி வழங்கிச் செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை வழங்கினார். இத்தொகை தரும் வட்டியிலிருந்து ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது….

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)  தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு…

நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்

நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம்   ஆளுநர் மாளிகை தேன்கூட்டில் மீது கை வைத்தபின்பும் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை.   ஊடகத்தில் நடவடிக்கை எடுப்பதற்குரிய செய்தி வந்தது எனில் எழுதிய செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி வெளியீட்டில் தொடர்புடைய பிறர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பது வழக்கம்.  ஆனால், அடிநிலை ஊழியர்கள் வரை வழக்கு தொடுப்பது முதன்முறைக் கொடுஞ்செயலாகும்.   இதழ்களில் பல் வேறு பிரிவுகள் இருப்பதை அறிவோம். அந்தந்தப் பிரிவினருக்கு அந்தந்தப்பிரிவில் உள்ள வேலைகளை உரிய…

இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும்  இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில் திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே பொதுத் தேர்த்ல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின்  முனைப்புடன் ஈடுபட வேண்டும்.   கலைஞர் கருணாநிதிக்கு இரு முறை நாட்டின் தலைமையமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழக அரசியலை விட மனம் இல்லாமல், “ என் உயரம் எனக்குத் தெரியும்” என அவ்வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார். அவ்வாறில்லாமல் மத்திய ஆட்சியில் முதன்மைப் பங்கேற்று மத்திய…

மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்! மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி  இன்று நலக்குறைவால் காலமானார். தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த  இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி). அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார். இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல்  உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர். தன் 25 ஆம்…

ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும்  நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3…

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  – இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே!  கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம்  ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான். ‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும்…

கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் !     “யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே!  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018…

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? -இலக்குவனார் திருவள்ளுவன்

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா?   இக்கட்டுரை பிராமணர்க்கு எதிரானதல்ல. அவ்வகுப்பிலும் பிற வகுப்பார்போல் நல்லாரும் உள்ளனர்; பொல்லாரும் உள்ளனர். மாந்தர் இயற்கை இது. சிலர் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் சேர்ந்த வகுப்பையோ பிற பிரிவையோ நாம் பொதுவில் குற்றமாகச் சொல்ல இயலாது. அதேபோல் அவ்வகுப்பைச்சேர்ந்த நண்பர்களும் எனக்குண்டு. சாதிவேறுபாடு பார்க்காத மனித நேயர்களும் அவர்களுள் உள்ளனர். ஆனால் மத்திய அரசும் அதன் நிழலரசும் சாதிவேறுபாட்டில் குற்றவாளிகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதால் இதை எழுதவேண்டி உள்ளது. சூத்திரனுக்கொரு நீதி – தண்டச் சோறுண்ணும்…