வெருளி நோய்கள் 891-895: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 886-890: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 891-895 கூட்டாட்சி, கூட்டுரிமைக் குடியிருப்பு, கூட்டாண்மை(condominium) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூட்டாண்மை வெருளி.00 புனைவுரு இசுகூபி -டூ (Scooby Doo) குறித்த வரம்பற்ற பேரச்சம் கூபிவெருளி.(இசு)கூபி-டூ (Scooby-Doo) என்பது அமெரிக்க இயங்குபடத் தொடராகும்.00 கூம்பு தித்தி குறித்த வரம்பற்ற பேரச்சம் கூம்பு தித்தி வெருளி1880 இல் இஃது முதலில் உற்பத்தியான பொழுது இதன் பெயர் கோழித்தீனி(Chicken Feed) என்பதுதான். கற்கண்டு நிறுவனம் (Wunderlee Candy Company) ஒன்று இதனை உற்பத்தி செய்தபொழுது அந்நிறுவனப் பெயரையும் இதன்…
வெருளி நோய்கள் 886-890: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 881-885: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 886-890 கூட்டத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கூட்ட வெருளி.பொதுவிட வெருளி(agoraphobia) உடன் தொடர்பு உடையது.கூட்டம் என்பது சந்திப்பு என்பதையும் குறிக்கும். இங்கே திரளாகக் கூடுவதைக் குறிக்கிறது. திரளான கூட்டத்தைப்பார்ததால் அஞ்சுவோர் உள்ளனர்.கூட்டத்தில் பொருள்கள் தொலைந்து போகலாம், உடைமைகள் திருடு போகலாம், துன்புறுத்தல் நிகழலாம், தொற்றுநோய்க்கு ஆளாகலாம் என்பன போன்ற அச்சங்களாலும் கூட்டம் கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.‘சொர்க்கம்’ திரைப்படத்தில் கண்ணதாசனின் சொல்லாதே யாரும் கேட்டால் எனத் தொடங்கும் பாடலில்,உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை…
வெருளி நோய்கள் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 871-875) வெருளி நோய்கள் 876-880 குறுந் தகடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுந் தகட்டு வெருளி.ஒலி. ஒளி அலைப்பதிவுகள் சரியாக மேற்கொள்ளப் படவில்லையோ, கீறல் விழுந்த குறுந்தகடாக இருந்து சரியாக இசையையோ உரையையோ கேட்க முடியாமல் போகுமோ, கேட்கத்தகாதவை அல்லது பார்க்கத்தகாதவை பதிவாிகியருக்குமோ என்ற பேரச்சத்திற்கு ஆளா்வோர் உள்ளனர்.00 குறுமி(dwarf planet) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறுமிவெருளி.dwarf planet என்றால் குள்ளன் என்கிறார்கள். அவ்வாறு சொல்வது உயர்திணையாகும். குறுமளவு உள்ள கோளைச் சுருக்கமாகக் குறுமி என்பது பொருத்தமாக இருக்கும்.Ceres என்னும் இலத்தீன்…
வெருளி நோய்கள் 871-875: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 866-870: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 871-875 குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறியீட்டு வெருளி.கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அல்லது உரையாடுவோர் குழுஉக் குறி முறையில் அல்லது அடையாள முறையில் அல்லது குறியீட்டு முறையில் பேசுவது.கால்கழுவுதல் போன்று இடக்கர் அடக்கலாகச்சொல்வதும் குறியீட்டு உரையேSymbolo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு.00 குறுகிய பகுதி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுகிய பகுதி வெருளி.ஒருவருக்குக் குறுகிய பொருட்கள் அல்லது இடங்களைப் பற்றிய வெருளியை ஏற்படுத்துவது.சான்றாகக் குறுகிய நடைபாதை, அடித்தளம் அல்லது மாடிச்சிற்றறை, அல்லது மாடிப்படிகளின் அடிப்பகுதி,…
வெருளி நோய்கள் 866-870: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 861-865: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 866-870 உறுப்பு அளவுகள் இயல்பிற்கு மாறாகக் குறைந்துள்ள குறளன்/குறளி(midgets) தொடர்பான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் குறளன் வெருளி.குள்ளவாதம், குறுநிலை என்று இதனை அழைக்கின்றனர். பொதுவாக அகவை வந்தும் 147 சிறுகோல்/செ.மீ. அளவிற்குக் குறைவானவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் சிலர் சற்று உயரமாக இருந்தாலும் கை, கால் உறுப்புகள் வழக்கத்திற்கு மாறாகக் குறு நிலையிலேயே இருக்கும்.00 குறிகை குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிகை வெருளி.அடையாளமாகக் காட்டப்பெறும் குறிகை தவறாக இருக்குமோ அதனால் தீய விளைவுகள் வருமோ என்ற…
வெருளி நோய்கள் 861-865: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 856-860:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 861-865 குளியலறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை வெருளி.Loutro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குளியல். இந்த இடத்தில் குளிக்கும் இடத்தை – குளியல் அறையை-க் குறிக்கிறது.00 குளியல் தொட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியல் தொட்டி வெருளி.மனை வெருளி(oikophobia) உள்ளவர்களுக்குக் குளியல் தொட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குளிர் பானங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் குளிர் பானங்கள் வெருளி.பற் சிதைவு, எலும்பு பலவீனம், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், செரிமானச் சிக்கல்கள்…
வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 851-855 காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை…
தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 14 இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப்…
வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 831-835: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 836-840 குமளிப் பழம் / சீமை இலந்தம் பழம் (Apple) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் குமளி வெருளி.ஆப்பிள் பழம் என்பது பொதுவாகச் சீமை இலந்தை என அழைக்கப் பெறுகிறது. அரத்த(இரத்த) நிறத்தில் இருப்பதால் அரத்தி என்கின்றனர் சிலர். ஆனால் செவ்வல்லியின் பெயர் அரத்தி. எனவே, இதற்குப் பொருந்தாது. ‘உன்னாம்’ என்றும் ‘குமளி’ என்றும் அகராதிகளில் உள்ளன. பயன்பாட்டுவிவரம் தெரியவில்லை. ஓர் அகராதியில் குறிப்பிடப்படும் சொல் வேறு அகராதிகளில் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு சொல்லை நாம்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19: திசைப்பெயர்கள் இக்கோப்பில் இந்நிலத்தின் வடக்கு திசையில் கோயில் மனை உள்ளது என எழுதப் பெற்றுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் திசைகளைக் குறிப்பிடும் திசைப்பெயர்கள் அடுத்து வல்லினம் மிகும். வடக்கு + திசை = வடக்குத் திசை கிழக்கு + கடல் = கிழக்குக்கடல் மேற்கு + சுவர் = மேற்குச்சுவர் வடக்கு + தெரு =…
தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 13 இடைச்செருகல்கள் இருவகை இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக்…
வெருளி நோய்கள் 801-805: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 796-800: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 801-805 கிறுகிறுப்பு தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கிறுகிறுப்பு வெருளி.நீர்ச்சுழற்சி அல்லது தலை சுற்றல் தொடர்பான பேரச்சத்தையும் குறிக்கும்.இரண்டிற்கும் பொதுவான சுழற்சி அடிப்படையில் முதலில் சுழற்சி வெருளி எனக் குறித்திருந்தேன். நீர்ச்சுழியாகிய நீர்ச்சுழற்சியைப்பார்க்கும் பொழுது தலை கிறு கிறு எனச் சுற்றுவதால் அல்லது தலை சுற்றும் என அஞ்சுவதால் வரும் பேரச்சத்தைத்தான் இது குறிக்கிறது. எனவே சுற்றல் வெருளி என்பதை விட கிறுகிறு வெருளி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனைக் குறித்துள்ளேன்.கிறுகிறுப்பு வரும்…
