சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 161-165 161. Abridged edition சுருக்கப் பதிப்பு   புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் சுருக்கமாக இருப்பினும் நூலின் அடிப்படைக் கருத்துகள் வெட்டப்படாமலும் நூலோட்டம் சிதையாமலும் இருக்கும். ( அல்லது இருக்க வேண்டும்.) 162. Abridged form சுருங்கிய வடிவம்  …

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 6/7 – – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 6/7 Act Of Legislature – சட்டமன்றச் செயன்மை மாநிலங்களின் சட்டப் பேரவைகளால்(சட்டமன்றக்கீழவை, மேலவைகளால்) இயற்றி ஏற்கப்பெறும் செயன்மைகளைக் குறிக்கும். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும். Act of misconduct – தீய நடத்தை தனித்தோ பிறருடன் சேர்ந்தோ…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  156-160 156. Above standard தரத்திற்கு மேலான   அளவு அல்லது தரம் அல்லது இரண்டும்  மேலான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.   ஆளுமையில் இயல்பு மீறிய திறமையை வெளிப்படுத்தும் தலைமைத்துவ நிலையைக் குறிக்கிறது.   நிதியியலில் கடனாளி வலுவான நிதிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. 157. Above the rank of பதவி நிலைக்கு மேலான   ஒரு பதவி நிலையை விட மேலான உயர் பதவியைக் குறிப்பது….

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:151-155

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 151-155 151. Above mentioned மேற்குறிப்பிட்ட மேற்குறித்துள்ள   முன்னர்ச் சொன்னதை எடுத்துரைப்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். எனினும் மேலே தெரிவிக்கப்பட்ட  என்பதை முந்தைய பக்கங்களில் என்றில்லாமல்  அதே பக்கத்தில் மேலே எனக் கருதும் வெற்றுரையாகக் கருதித் தவிர்க்க வேண்டுகின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்த இடங்களில் மேலே என்பதைவிட /முன்னதாக  முன்னால் /ஏற்கெனவே/ முந்தைய என்று குறிப்பிடத் தெரிவிக்கின்றனர். 152. Above normal இயல்பின் மிகுந்த இயல்பினும் மேலான…

ஆளுமையர் உரை 83 & 84 : என்னூலரங்கம்: கலைகள்- இணைய அரங்கம்

தமிழே விழி!                                                               தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம் மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் முனைவர் இரா.மதிவாணன் உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் தொடர்ந்து முற்பகல் 11.00   …

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 Act of bad faith – நம்பிக்கை வஞ்சச் செயல் தீங்கெண்ணச் செயல் நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும். Act of bad faith for benefit…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:146-150

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 146-150 146. Above மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.தலைக்குமேல், விண்ணில், முன்னிடத்தில், உயரமாக     எழுத்து வடிவில் தெரிவிக்கையில் முன்னர்க் கூறியதைச் சுட்டிக்காட்ட மேலே சொன்ன, மேலே தெரிவித்த, மேலே கூறிய என்பன போன்று வரும்.   வாதுரையிலோ தீர்ப்புரையிலோ முதலில் கூறியதை எடுத்துக் கூறும் பொழுது மேலே சுட்டிய/குறிப்பிட்ட எனப் பயன்படுத்துவர். 147. Above all எல்லாவற்றிற்கும் மேலாக   யாவற்றையும் விட மேலாக,  …

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 141-145 141. Abortive trial   கைவிடப்பட்ட உசாவல் விசாரணை    முடிவு எட்டப்படாத  உசாவல் / விசாரணை   சில காரணங்களுக்காக விசாரணை முழுமையுறாத, தீர்ப்பளிப்பதற்கு முன் முடிக்கப்படுகிற உசாவல்/விசாரணை   142. Abound மிகுந்திரு நிரம்பியிரு பொங்கு மல்கு   மிகுதியான எண்ணிக்கையில் அல்லது பேரளவிலான அளவில் உள்ளனவற்றைக் குறிப்பது. 143. About பற்றி   குறித்து இங்குங்குமாய், சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட. கப்பலின்…

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 Act Done Under Colour Of Office பதவியைச் சாக்கிட்டு எதனையும் செய்தல் / பதவியின் உருவில்  அதிகாரப் போர்வைச் செயல் எத்தகைய அரசாங்கப் பொறுப்பும் இல்லாத ஒருவர், ஒரு பொது ஊழியராகப் பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படிப் பொறுப்பில் இல்லாத…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் ! தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில்  கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம். இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 136-140 136. Abort   கருச்சிதைவுறு   கருக்குலைதல், இடைமுறி, இடையழி, கருச்சிதை, கருப்பங்கரைதல், கருச் சிதைதல், காய்விழுதல், கருச் சிதைந்துவிழுதல், சிதை, செயன்முறி, செயல்முறிப்பு .  இவற்றுள் கரு தொடர்பில்லாத சொற்கள் பொதுவான முறிவுகளைக் குறிப்பன.   abortus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருச்சிதைவு. இதிலிருந்து abort > abortion   உருவாயின. 137. Aborticide கருக்கொலை  தானாகவே கருவைக் குழந்தையாக வளரவிடாமல் அழிப்பது/கொல்லுவது கருக்கொலை. 138. Abortion…