பெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்
பெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள் இருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக ‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற எண்ணம் வந்தது. மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர் சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே…