தனித்தமிழ்த் திருநாள்   பொங்கற் புதுநாளெனும் தமிழர் திருநாள் பொய்யுரையின் மீது கட்டப்பட்ட பூசாரி விழாக்களிலே ஒன்றல்ல!  தனித்தமிழ்த் திருநாள்! கருத்தளிக்கும் பெருநாள்! தமிழன், உழைப்போரை உயர்த்திடும் பண்பையும் உழைப்பின் பயனை ஊருடன் கூடி உண்டு, இன்பம் பெறும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வந்தது பொங்கற் புதுநாள்! அறுவடை விழா!  விதைக்காது விளைந்த கழனியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது அரிசியாக்கி, வேகாது வடித்தெடுத்து, உண்ணாது காக்கைக்கு வீசிடும் உலுத்தர் விழாவல்ல! உழைத்தோம், பலன் கண்டோம்; கண்ட பலனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம் என்ற…